Home ஹெல்த்

வெற்றிலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? முன்னோர்கள் வெற்றிலை போட்ட பின்னணி இது தாங்க!

13

சென்னை: வெற்றிலை என்பது விருந்து சாப்பிட்டுவிட்டு மெல்வதற்கு மட்டுமல்ல அதில் ஏராளமான மருத்துவ குணாதிசயங்கள் நிறைந்துள்ளன.

நம் முன்னோர்கள் மிகவும் வலிமையாகவும், சுறுசுறுப்பாகவும் தன் அன்றாட வாழ்க்கையில் வாழ்ந்தார்கள், அதற்கு ஒரு காரணம் வெற்றிலை என்றும் கூறலாம். அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் காலை விடிந்தது முதல் இரவு தூங்கும் வரை வெற்றிலையை பாக்கு மற்றும் சுண்ணாம்பு சேர்த்து பயன்படுத்தினர்.

  • வெற்றிலை நம் உடலில் உள்ள கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், ஜீரண மண்டலம், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி பாதுகாக்கும்.
  • ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
  • தலைவலி, பித்தம் மற்றும் கபத்தை போக்கும்.
  • வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் புண்களை ஆற்றக் கூடியது.
  • உடல் எடையை குறைக்கும்.
  • சர்க்கரை நோயையும், ரத்த அழுத்தத்தையும் சீராக வைத்துக் கொள்ளும்.
  • வெற்றிலையில் ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி ப்ராப்பர்ட்டி, கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி, சி அனைத்தும் உள்ளன.

வெற்றிலைச்சாறு சிறந்த நரம்பு டானிக்காகவும் பயன்படுகிறது.

வெற்றிலை கசாயம்:

தலையில் நீர் கோர்த்தல், தலைவலி, ஜுரம், சளி, இருமல் போக மூன்று வெற்றிலை, சிறிது இஞ்சி துண்டு, அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் தனியா, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து இடித்துக் கொள்ளவும். இதை தண்ணீரில் கலந்து, இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் அளவு வரும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி வெல்லம் போட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அனைத்து உடல் உபாதைகள் நீங்கும்.

மிளகு மற்றும் வெற்றிலை

  • காலையில் இரண்டு வெற்றிலைகளில் ஐந்து மிளகை வைத்து சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் குறையும்.
  • மலச்சிக்கல் நீங்கும், ரத்த ஓட்டம் சீராகும்.
  • உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறும். உடல் புத்துணர்வு பெறும்.