Home Exclusive பக்கம்

Exclusive: இந்திராகாந்தியின் ‘ரீல்’ பேத்தி! இன்ஸ்டாவில் கலக்கும் அஜிதா! என்ன பின்னணி?

16

கொச்சின்: இந்திராகாந்தியை போல் அச்சு அசலான தோற்றத்தில் இருப்பதால் கேரளாவில் சமூக வலைதள ஸ்டாராக ஜொலிக்கிறார் அஜிதா சிவபிரசாத்.

இந்திராகாந்தியை போல் தோற்றம் அமைந்தது எப்படி, என்ன பின்னணி, என்பது குறித்து அஜிதா சிவபிரசாத்திடம் பாசிட்டிவ் தமிழ் சார்பில் பேசினோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது;

திருப்பம் தந்த திருப்பதி

”கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த நான், பி.காம் படித்திருக்கிறேன். கணவருடன் இணைந்து அக்கவுண்ட்ஸ் பணிகளை மேற்கொண்டு வந்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பதி சென்ற நான், அங்கு மொட்டை அடித்தேன். அதன் பின்னர் முடி வளரத் தொடங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் இந்திராகாந்தியை போல் ஹேர் ஸ்டைல் தானாக அமைந்துவிட்டது. இது இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பை கொடுத்தது.”

ராகுலுடன் சந்திப்பு

”அண்மையில் கேரளாவுக்கு பிரச்சாரம் செய்ய வந்திருந்த ராகுல்காந்தியையும், பிரியங்கா காந்தியையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு பேருமே வியப்புடன் என்னைப் பார்த்து புன்னகைத்தனர். அதுமட்டுமல்ல பாலக்காடு, பத்தினம்திட்டா, கொடுங்களூர் என மூன்று இடங்களில் காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு வந்ததன் பேரில் கலந்துகொண்டேன்.”

காங்கிரஸ் உறுப்பினர் இல்லை

”தற்போது காங்கிரஸ் கட்சியில் நான் உறுப்பினர் கிடையாது. வாய்ப்பு வந்தால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்படுவேன் என எண்ணுகிறேன். நான் இந்தளவுக்கு சமூக வலைதளங்களில் வைரலானதற்கு எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அளித்த சப்போர்ட்டும் ஒரு காரணம். எனக்கு 2 பிள்ளைகள். மூத்த மகன் +2 படிக்கிறார், இளைய மகன் 4ஆம் வகுப்பு படிக்கிறார்.”