Home ஹெல்த்

மஞ்சள்காமாலை நோயை குணப்படுத்தும் ஆற்றல்! இயற்கை தந்த கிஃப்ட் கீழாநெல்லி!

16

சென்னை: கல்லீரல் பாதிப்பு, மஞ்சள்காமாலை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கீழாநெல்லி அற்புத மருத்துவப் பொருளாக பயன்பட்டு வருகிறது.

கீழாநெல்லியை பொறுத்தவரை ஹெபாடோப்ரொடெக்டிவ் தன்மையுடன் கூடியது. மனித உடலில் கல்லீரல் ஒரு முக்கியமான சுரப்பி உறுப்பு ஆகும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கவும் பயன்படுகிறது.

ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டால் மனிதனின் உடல் இயக்கத்தை குறைத்துவிடும். அதே வேளையில் ஆரோக்கியமான கல்லீரல் நல்ல உடல் நலத்தை அளிக்கிறது.

நோய் அறிகுறிகள்:

கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் வாயில் துர்நாற்றம் வீசும், கண்களின் கீழ் கருவளையம் தோன்றும். பசியின்மை, கண்கள் மஞ்சள் நிறமாக மாறும், சிறுநீர் அடர் நிறமாக இருக்கும்.

கல்லீரல் நோய்க்கிருமி தொற்று :

பொதுவாக, கல்லீரலை பாதிக்கும் கிருமிகள் பாக்டீரியா, பங்கஸ், பெரசைட்ஸ் மற்றும் வைரஸ்கள் ஆகும். ஹெபாடிட்டீஸ் ஏ, பி, சி வைரஸ்கள் உள்ளன.

மஞ்சள் காமாலை:

ஹெபாடிட்டீஸ் பி வைரஸ் கல்லீரலை பாதிக்கும், மிக மோசமான நோய் தாக்கத்தை உண்டாக்கும். கல்லீரலின் இயக்கத்தை பாதிக்கும், மீளாத பாதிப்புகளை உண்டாக்கும், கல்லீரல் சுருங்கும், புற்றுநோய் வரக்கூடிய ஆபத்து உண்டு.

கீழாநெல்லி பற்றிய ஆய்வு :

ஆராய்ச்சியாளர்கள் கீழாநெல்லியை ஆய்வு செய்து, ஹெபாடிட்டீஸ் பி கிருமியை அழிக்கக்கூடியது என்று கண்டறிந்தனர். கல்லீரலை பாதிக்கும் எந்த ஒரு கிருமி தொற்றையும் குணமாக்கும் ஆற்றல் உடையது, உடலில் உள்ள கழிவுகளை நீக்கும், குடல், மண்ணீரல், கணையம், இதயம், வயிறு, நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு உள் ஊட்டத்தை தந்து வலுப்படுத்தும், சுவாச நோய்கள் வராமல் தடுக்கும்.

கீழாநெல்லி உணவாக:

கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி கீரை, நெல்லிக்காய், மிளகு, சீரகம், கல் உப்பு ஆகியவற்றை அரை டம்ளர் நீரில் சேர்த்து மைய அரைத்து, வடிகட்டிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு கப் மோர் குடிப்பது நல்லது. இது நோய்களின் ஆரம்ப கட்டத்தில் பலன்களை அளிக்கும். மேலும், மருத்துவரின் ஆலோசனையின்படி, ஹெபடைடிஸ் வைரஸ் சிகிச்சையையும் பின்பற்ற வேண்டும்..