Home சுற்றுலா

புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு புத்துயிரூட்டிய சுற்றுலாத்துறை! மதுரையிலிருந்து ஜஸ்ட்..!

16

ராமநாதபுரம்: புயலால் அழிந்த தனுஷ்கோடிக்கு சுற்றுலாத்துறை சார்பில் புத்துயிரூட்டியிருப்பதால் ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடிக்கும் தவறாமல் விசிட் அடிக்கின்றனர்.

தனுஷ்கோடி கடற்கரைக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அழகிய கடற்கரை ஒருபுறம் மன்னார் வளைகுடா மற்றும் மறுபுறம் வங்காள விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது. 15 கிமீ நீளம் கொண்ட தனுஷ்கோடி கடற்கரையானது அதிக அலைகளை சந்திக்கும் ஒன்றாக திகழ்கிறது.

மதுரை சர்வதேச விமான நிலையம், சுமார் 191 கிமீ தொலைவிலும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 24 கிமீ தொலைவிலும் தனுஷ்கோடி அமைந்துள்ளன. கடல்மீன் சாப்பாடு கடைகள் சிறியளவில் நிறைய உள்ளன. இதன் மூலம் உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டிவருகின்றனர்.

இதனிடையே தனுஷ்கோடியையும், இலங்கையின் வடக்கு பகுதியையும் 1964 ஆம் ஆண்டு புயல் தாக்கியது. அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல் தனுஷ்கோடி என்ற கிராமமே உருக்குலைந்து சிதைந்து போனது.

புயலின் கோரத்தாண்டவத்தால் ஒரு ஊரே அடியோடு அழிந்து, மண் மூடிப் போன மேடாக மாறிப் போனது. புயலின் அடையாளமாக இன்று சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன. இன்றும் சில மீனவ குடும்பங்கள் அங்கு வசிக்கின்றன. அவர்கள் தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.