Home விவசாயம்

சக்கை போடு போடும் சப்போட்டா பழச்சாகுபடி! எப்படி பயிரிட வேண்டும் தெரியுமா?

12

புதுக்கோட்டை: சப்போட்டா பயிர் எந்த மண் வகை மண்ணிலும் செழித்து வளரக் கூடியது. நல்ல வடிகால் வகரியான மண் ஏற்றது. ஆழமான வண்டல் மண் கலந்து நிலங்கள் மிகவும் உகந்தது. சப்போட்டா ஓரளவு உப்புத் தண்மையுள்ள நிலங்களிலும் உப்புத் தன்மை கொண்ட நீரையும் தாங்கி வளரக்கூடியது. குறிப்பாக ஜீலை – ஆகஸ்ட் மாதங்களில் சாகுபடி செய்வதற்கு சிறந்தது.

ரகங்கள்:

கிரிக்கெட் பால், ஓவல், பாராமசி, தகரப்புடி, துவாரப்புடி , கீர்த்தபர்த்தி, பாலா, காளிப்பட்டி, கோ.1, கோ 2, பெரியகுளம் 2, பெரியகுளம் 3 , பெரிய குளம் 4 , பெரிய குளம் 5 என சப்போட்டாவில் ஏராளமான ரகங்கள் உள்ளன.

எப்படி குழிகள் எடுக்கனும்?

சப்போட்டா பயிரிட 8 மீட்டருக்கு இடைவெளியில் 60 செ.மீ நீளம், அகலம், 60 செ.மீ ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கப்படவேண்டும். குழிகளை சிறிது நாட்களுக்கு ஆறவிடவும். 10 கிலோ மக்கிய தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு, மேல் மண் காலங்களிலேயே செடிகள் நடப்படுதல் வேண்டும். செடிகள் நட்ட உடன், செடிகளுக்கு இருபுறமும் குச்சிகள் வைத்துக் கட்டுவதன் மூலம் காற்றில் செடிகள் ஆடிச் சேதமடைவதைத் தவிர்க்கலாம்.

வறட்சியை தாங்கும்:

மகரந்தச் சேர்க்கை நல்ல முறையில் நடைபெற்று, காய்கள் அதிகம் பிடிக்க, குறைந்த பட்சம் 2 அல்லது 3 மரங்கள் இருக்குமாறு பார்த்து நடவும். செடிகள் நட்ட சிறிது நாட்களுக்கு, 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை பின்னர் 4 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவிலும் நீர் ஊற்றவேண்டும். ஒரு வருடத்திற்குப் பிறகு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் நீர் பாய்ச்சலாம். இப்பயிர் சிறந்த முறையில் வறட்சியை்த தாங்குவதால், மானாவாரிப் பயிராகவே பயிர் செய்யலாம்.