Home விவசாயம்

ஏற்றம் தரும் எலுமிச்சை சாகுபடி! குறைவான வேலையாட்கள் போதும்! எந்த ரகம் பெஸ்ட்?

16

சென்னை: எலுமிச்சை சாகுபடி குறித்தும் எந்த ரகம் சிறந்தது என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

எலுமிச்சை சாகுபடி:

எலுமிச்சை கன்றுகள் வளர்ச்சிக்கு மண்ணில் இரண்டு மீட்டர் ஆழத்துக்கு நல்ல மண் கண்டம் இருக்க வேண்டும். நிலத்தில், வடிகால் வசதி இருக்க வேண்டும்.மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.5 அலகு வரை உள்ள மண்ணில் சிறப்பாக வளரும். நீர் தேங்கக் கூடிய வடிகால் வசதியற்ற மண் எலுமிச்சை சாகுபடிக்கு ஏற்றதல்ல.

வெப்ப மண்டலப்பயிர்:

எலுமிச்சை ஒரு முக்கிய வெப்ப மண்டலப் பிரதேச பயிர். இது கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில 25 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வளரக்கூடியது. வெப்பநிலை குறைந்தால் பூ எடுக்க காய் எடுக்க பழுக்க என அனைத்து நிலைகளிலும் தாமதம் ஏற்படும். எலுமிச்சை வறட்சிப் பகுதிகளுக்கு ஏற்ற பயிராகும். அதுமட்டுமின்றி போதிய வெப்பநிலையோடு குறிப்பிட்ட அளவு காற்றின் ஈரப்பதமும் இருந்தால் சிறப்பான மகசூல் கிடைக்கும். அதே நேரத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகளவில் உள்ள பகுதிகளுக்கு எலுமிச்சை ஏற்ற பயிராக இருக்காது.

குறைவான வேலையாட்கள்

எலுமிச்சை சாகுபடிக்கு குறைவான வேலையாட்கள் இருந்தாலே போதுமானது. சரியாகப் பராமரித்தால் வஞ்சகம் இல்லாமல் வருமானம் கொடுக்கக்கூடிய பயிர்.இரகங்கள்:

பி.கே.எம். -1:

இந்த இரகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மரம். இது வேகமாக வளரக்கூடிய பயிராகும். வருடம் முழுவதும் பழங்களைத் தரக் கூடியது. ஒரு பழத்தின் எடை 50 கிராம் வரை இருக்கக்கூடும். ஒரு மரத்திலிருந்து சராசரியாக 934 கிடைக்கும். – 1000 பழங்கள் வரை