Home சுற்றுலா

மனதை மயக்கும் மன்னவனூர் மலை கிராமம்! கொடைக்கானல் பக்கம் போனால் மிஸ் பண்ணிடாதீங்க!

10

திண்டுக்கல்: கொடைக்கானலை சுற்றி அமைந்துள்ள மலை கிராமங்களில் மன்னவனூர் மிக அழகான கிராமமாகும். கொடைக்கானலிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு பைக் அல்லது காரில் சென்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும். பஸ் வசதிகளும் உள்ளன.

மன்னவனூர் கிராமத்தில் தான் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் அமைந்துள்ளது. அதேபோல் முயல் மற்றும் செம்மறியாடு ஆராய்ச்சி பண்ணைகளும் உள்ளன. பசுமையான புல்வெளிகள் இங்கு காணப்படும். இங்கு புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது. முதலில் இங்குள்ள பண்ணைகளை பார்க்கலாம்.

முயல் பண்ணை

முயல் பண்ணையில் பல்வேறு அரிய வகை முயல்களின் இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த நிலையத்தில் சுத்தமான நீலகிரி தைலம், முயல் ரத்த கூந்தல் தைலம், மூட்டு வலி தைலம் ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன.

இங்குள்ள அழகிய புல்வெளி பள்ளத்தாக்குகளில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருப்பதையும், சில காட்டு விலங்குகளையும் காணலாம். பண்ணையிலிருந்து பத்து நிமிட தொலைவில் மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளது, அழகிய ஏரியின் கரையில் அமைந்துள்ளது.

குதூகலம்

அதேபோல் மன்னவனூரில் ஜிப்லைன், காயக்கிங், பரிசல் பயணம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. மேலும், குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பெரிய சிறுவர் பூங்கா உள்ளது. அங்கு கழிப்பறை வசதிகளும் உள்ளன.
உணவு அருந்துவதற்கு பல துரித உணவு கடைகளும் டீ ஷாப்களும் உள்ளன. இந்த பகுதியில் ஒரு அழகான நீர்த்தேக்கம் உள்ளது, அதன் நீரோடையின் அழகை நாம் ரசிக்கலாம். குதிரை சவாரி வசதியும் உள்ளது. இந்த இடத்தில் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை கழிக்கலாம்.